திமுக அரசு தமிழகத்தை போதை கலாச்சாரமாக மாற்றிவிட்டது: பாஜக குற்றச்சாட்டு

பொள்ளாச்சி அருகே பாஜக மகளிர் அணி நிகழ்ச்சியில், திமுக அரசு டாஸ்மாக் கடைகளை மூடுவதாக கூறி, அதிக பார்களை திறந்து தமிழகத்தை போதை கலாச்சாரமாக மாற்றியதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பம்பாளையம் கிராமத்தில் கோவை தெற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வசந்த ராஜன், கோவை மாவட்டத்தில் ஒரு லட்சம் உறுப்பினர்களை இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், தற்போது வரை 16 ஆயிரம் பேர் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றப்படவில்லை. ஆனைமலையாறு, நல்லாறு திட்டம், தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் விநியோகம் செய்வோம் என கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. காயர் தொழிற்சாலைகளை வெள்ளை நிற பட்டியலில் இருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆரஞ்சு நிற பட்டியலில் மாற்றியது. எந்தத் தொழில் செய்தாலும் அவர்களுக்கு நெருக்கடியை கொடுத்து லஞ்சம் பெறுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்," என்றார்.

"அரசு மதுபான கடைகளை படிப்படியாக மூடுவதாக சொல்லி விட்டு அதிக அளவில் தனியார் மதுபான கடைகளை திறந்து வருகின்றனர். இதனால் போதை கலாச்சாரம் அதிகரித்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கலவரம் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடு நடைபெற்று வருகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத மக்கள் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்," என வசந்த ராஜன் குற்றம்சாட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...