உடுமலையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் இரத்ததான முகாம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர். ஏரிப்பாளையத்தில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர். திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் மங்களம் ரவியின் அறிவுறுத்தலின் பேரில், நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் கோதீஸ்வரி கந்தசாமி, மாவட்டப் பொதுச் செயலாளர் வடுகநாதன், நகரப் பொதுச் செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா, நகர மகளிர் அணி தலைவர் ரதி உள்ளிட்ட பல பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேநேரம், ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள தங்காத்த அம்மன் கோவிலில் பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம், மாநில செயற்குழு உறுப்பினர் கோதீஸ்வரி கந்தசாமி மற்றும் ஏரிப்பாளையம் பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...