கோவை தெற்கு தொகுதியில் காடுகளை உருவாக்குவதே எனது எண்ணம் - வானதி சீனிவாசன் எம்எல்ஏ

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி இரத்ததான முகாம் மற்றும் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். தொகுதியில் காடுகளை உருவாக்கும் திட்டம் குறித்தும் விளக்கினார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு ராம் நகர் பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், "பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி வரை பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். பிரதமர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் இந்த நாட்டை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறோம்," என்றார்.



"அம்மாவின் பெயரில் மரக்கன்று நடும் திட்டம், குறுங்காடுகள் வளர்க்கும் திட்டம், உறுப்பினர் சேர்ப்பு முகாம் ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருகிறோம். சித்தாப்புதூர் பகுதியில் எச் ராஜாவுடன் இணைந்து உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்று நடும் திட்டத்தை செயல்படுத்தினோம்," என்று அவர் தெரிவித்தார்.

ராம் நகர் பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் முப்பது பேர் வரை இரத்த தானம் செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், "இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு பொதுமக்களுக்கு தேவைப்படுகிறது," என்றார்.



தொகுதியில் காடுகளை உருவாக்கும் திட்டம் குறித்து பேசிய வானதி சீனிவாசன், "ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள பசுமை படை மாணவர் அமைப்பை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளேன். எனது தொகுதியில் பெரும்பாலும் நாட்டு மரங்களையே குறுங்காடுகள் திட்டத்தில் நடுகிறோம். சிறுதுளி அமைப்பின் உதவியுடன் இத்திட்டத்தை செயல்படுத்துகிறோம். தெற்கு சட்டமன்ற தொகுதியின் பொது இடங்களில் எல்லாம் காடுகளை உருவாக்குவதே எனது எண்ணம்," என்று தெரிவித்தார்.

மேலும், கோவை சுக்கிரவார் பேட்டையில் உள்ள விஸ்வேஸ்வரா பள்ளியில் நடைபெற்ற விஸ்வகர்மா ஜெயந்தி விழாவிலும் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்து, அங்கிருந்த விஸ்வகர்மா சமூக மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...