கோவையில் மத நல்லிணக்க மிலாடி நபி விழா: அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து கொண்டாட்டம்

கோவையில் பல் சமய நல்லுறவு இயக்கம் ஏற்பாடு செய்த மத நல்லிணக்க மிலாடி நபி விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர். உலக அமைதிக்காக பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.



Coimbatore: கோவையில் பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக, அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து மத நல்லிணக்க மிலாடி நபி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முஸ்லீம்கள், இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தினர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அசைவ விருந்து அன்னதானமாக வழங்கப்பட்டது. மேலும், உலக மக்களின் அமைதி மற்றும் நலனுக்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.



விழாவில் இஸ்லாமிய குருமார்கள், பேரூர் மடாதிபதி தம்புரான் உள்ளிட்ட இந்து சமூக பிரதிநிதிகள், குருத்துவார் தரப்பில் டோனி சிங் உள்ளிட்ட பல்வேறு மத பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய மத பிரதிநிதிகள், "நாட்டில் வெவ்வேறு மதங்களாக மக்கள் இருந்தாலும் அனைவரும் ஒன்று" என்று வலியுறுத்தினர்.

பல் சமய நல்லோர் இயக்கத்தின் தலைவர் முகமது ரபி பேசுகையில், "தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி முதன் முறையாக மிலாடி நபிக்கு விடுமுறை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மிலாடி நபிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சிறுபான்மையினருக்கு பல்வேறு உதவிகளை கலைஞர் மற்றும் திராவிட மாடல் ஆட்சியினர் செய்து வருகின்றனர்" என்று நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், எதிர்காலத்திலும் அனைத்து மத விழாக்களையும், பண்டிகைகளையும் மத நல்லிணக்க விழாவாக கொண்டாடுவதாக உறுதியளித்தனர். மேலும், நாட்டில் பிளவு வாத சக்திகளுக்கு இடமில்லை என்றும், மதங்கள் வேறாயினும் அனைவரும் ஒரே மனதுடன் நல்லிணக்கம் பேணி வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...