சிறுதுளி அமைப்புக்கு நிலையான சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான தேசிய விருது

சிறுதுளி அமைப்பு CSR Universe-ன் தேசிய மாநாட்டில் நிலையான சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான விருதினை பெற்றுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து இந்த ஒரு அமைப்பிற்கு மட்டுமே விருது வழங்கப்பட்டுள்ளது.


Coimbatore: சிறுதுளி அமைப்பு தேசிய அளவிலான சிறந்த சமூக மாற்றத்திற்கான விருதினை பெற்றுள்ளது. CSR Universe-ன் தேசிய மாநாடு மற்றும் சமூக மாற்றத்திற்கான 4ஆம் ஆண்டு விழாவில் நிலையான சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதிலிருந்து 489 நிறுவனங்கள் விருதுகளுக்கு விண்ணப்பித்தன. அதில் 38 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் இருந்து சிறுதுளி அமைப்பிற்கு மட்டுமே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



அமுமு அறக்கட்டளை, EID Parry மற்றும் சிறுதுளி இணைந்து புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, கரூர், சென்னை மாவட்டங்களில் நன்னீர் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றன. சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கண்மாய்களை பலப்படுத்தி, கொள்ளளவை அதிகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் குளங்களை தூர் வாரி, கொள்ளளவை அதிகப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி, குளத்தின் நடுவில் பெர்கோலேஷன் ஷாஃப்ட் (மழைநீர் சேகரிப்பு) அமைக்கப்படுகிறது. இதனால் சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

நன்னீர் திட்டத்தின் கீழ், இதுவரை 18 நீர்நிலைகள் மீட்டெடுக்கப்பட்டு, 2000 மில்லியன் லிட்டருக்கு மேல் சேமிப்பு திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 21,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். முன்பு ஒரு போகம் மட்டுமே பயிர் செய்த விவசாயிகள், தற்போது வருடத்திற்கு மூன்று போகம் விவசாயம் செய்யும் நிலைக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இத்தகைய சமூக மாற்றத்திற்கான பணிகளை ஆய்வு செய்த CSR Universe, சிறுதுளி அமைப்பிற்கு இந்த தேசிய அளவிலான விருதினை வழங்கியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...