மேட்டுப்பாளையத்தில் வளர்ப்பு நாய் தெரு நாய்களால் தாக்கப்பட்டு உயிரிழப்பு; மனிதர்களைப் போல ஈமச்சடங்கு செய்த உரிமையாளர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வளர்ப்பு நாய் தெரு நாய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தது. உரிமையாளர் அருள்வேல் தனது நாய்க்கு மனிதர்களுக்கு செய்வது போல ஈமச்சடங்கு செய்து அடக்கம் செய்தார்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மணி நகர் பகுதியில் வீட்டில் வளர்த்து வந்த நாய் தெரு நாய்கள் கடித்து குதறியதில் உயிரிழந்தது. உயிரிழந்த நாய்க்கு மனிதர்களைப் போல ஈமச்சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்த அதன் உரிமையாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் மணி நகர் அரசு பள்ளி பின்புறம் வசிக்கும் அருள்வேல் என்பவர் கடந்த ஆறு ஆண்டுகளாக டேஸ் இனத்தைச் சேர்ந்த ஆண் நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அதற்கு ஷேடோ என்று பெயரிட்டு வளர்த்துள்ளார். காய்கறி வியாபாரம் செய்து வரும் அருள்வேல், ஷேடோவை தனது குடும்பத்தில் ஒருவராகப் பாவித்து பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார்.

நேற்று, வீட்டிலிருந்து வெளியே வந்த ஷேடோவை தெருவில் இருந்த நாய்கள் கடித்ததாகக் கூறப்படுகிறது. à®‡à®¤à®©à®¾à®²à¯ நாய்க்கு உடல் பகுதியில் காயம் ஏற்பட்டு ஷேடோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அதன் உரிமையாளர் அருள்வேல் சேர்த்துள்ளார். அங்கு நாய்க்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள். அதன் உடலில் விஷம் கலந்து விட்டதாகவும் உடல் உறுப்புகள் செயல் இழந்து விட்டதாகவும் அதனை உயர்ப்பிப்பது மிகவும் கஷ்டமான செயலாக மாறிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தன்னால் இயன்ற அளவு செலவு செய்தும் நாயை காப்பாற்ற முடியவில்லை என்ற மனவேதனையில் அதனை வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்தவுடன் அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது.



தனது குடும்பத்தில் மிகவும் பிரிக்க முடியாத பிணைப்பாக மாறிய ஷேடோ நாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் அதன் மேல் உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் வீட்டில் ஒருவர் மரணித்தால் என்ன ஈம காரியங்கள் செய்வோமோ அதே போன்று நேற்று இரவு முதல் அதற்கு ஈம காரியங்கள் செய்தார்.



மேலும் அதன் உரிமையாளர் அருள்வேல் மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் மகள் என அனைவரும் அந்த நாயின் இழப்பை தாங்கமுடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது.



வீட்டில் விளக்கு ஏற்றி இரவு முழுவதும் அந்த நாய்க்கு காரியங்கள் செய்த பின்னர் இன்று காலை தனக்கு சொந்தமான வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று மரியாதை உடன் கோவிந்தம் பிள்ளை சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. 





இந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதை காட்டுவதால் நகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...