திருப்பூரில் சுற்றுலா வளர்ச்சி ஆய்வுக் கூட்டம்: உலக சுற்றுலா தின விழாவை திருமூர்த்தி மலையில் கொண்டாட முடிவு

திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உலக சுற்றுலா தின விழாவை திருமூர்த்தி மலையில் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. சாகச சுற்றுலா செயல்பாடுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் சுற்றுலா தொழில் முனைவோர் ஆய்வுக் கூட்டம் உடுமலையில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நடைபெற்றது.



மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சுற்றுலாத் துறையின் செயல்பாடுகள், நடைபெற்று வரும் திட்டப் பணிகள், தமிழ்நாடு அரசின் சுற்றுலாக் கொள்கை மற்றும் உலக சுற்றுலா தின விழா குறித்து விவாதிக்கப்பட்டது.



கூட்டத்தில் பங்கேற்ற சுற்றுலா தொழில் முனைவோர்கள், மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி தொடர்பாக பல்வேறு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.



குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்தில் சாகச சுற்றுலா செயல்பாடுகளை அறிமுகப்படுத்தினால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து, சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று வலியுறுத்தினர். இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட சுற்றுலா அலுவலரிடம் கோரிக்கை விடுத்தனர்.



கலந்தாய்வுக் கூட்டத்தின் முடிவில், உலக சுற்றுலா தின விழாவை திருமூர்த்தி மலையில் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. மேலும், உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சுற்றுலா மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளையும், சுற்றுலா கருத்தரங்கமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



இந்தக் கூட்டத்தில் உடுமலை அரசு கலைக்கல்லூரி சுற்றுலாத்துறை உதவி பேராசிரியர் விஜய் ஆனந்த், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள், சுற்றுலா சங்கங்களின் நிர்வாகிகள் பிரசாத், பொன்ராஜ், செயது முஹமது, சந்தோஷ் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை ஆசிரியர் ஜவகர் தொகுத்து வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...