அன்னூர் அருகே பாலிடெக்னிக் மாணவருக்கு பாலியல் தொந்தரவு: முதியவர் போக்சோவில் கைது

அன்னூர் அருகே 16 வயது பாலிடெக்னிக் மாணவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சைல்டு ஹெல்ப்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டது.


கோவை: அன்னூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், கோவையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த வாரம் இச்சிறுவன் சாலையில் நடந்து செல்லும்போது, நல்லி செட்டிபாளையத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் பத்மநாதன் என்பவர் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் சைல்டு ஹெல்ப்லைன் உதவியை நாடினார். இதையடுத்து, சைல்டு ஹெல்ப்லைன் அமைப்பின் மேற்பார்வையாளர் சூரியமணி, அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில், மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் நிர்மலா வழக்குப் பதிவு செய்தார். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட பத்மநாதனை நேற்று (செப்டம்பர் 17) கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...