கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை 2024-25 தொடக்கம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2024-25 கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 16 முதல் தொடங்குகிறது. விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே பெறப்படும்.


Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 16, 2024 முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் வாயிலாக 11 கல்வி வளாகங்களில் 34 துறைகளில் முதுகலைப் படிப்பும், 29 துறைகளில் முனைவர் பட்டப் படிப்பும் வழங்கப்படுகிறது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் (https://admissionsatpgschool.tnau.ac.in/) மூலமாக மட்டுமே பெறப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 30, 2024 நள்ளிரவு 11.59 மணி வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இளங்கலை (வேளாண்மை) மற்றும் அதன் சார்ந்த படிப்புகளை முடித்த மாணவர்கள் முதுகலை பட்டப்படிப்பிற்கும், முதுகலை (வேளாண்மை) அல்லது தோட்டக்கலை / M.Tech (வேளாண் பொறியியல்) முடித்த மாணவர்கள் முனைவர் பட்டப்படிப்பிற்கும் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு சான்றிதழ் (Provisional Degree Certificate) அல்லது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் முந்தைய பருவ மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும், பட்டப்படிப்பு சான்றிதழை சமர்பித்த பிறகே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.

மாணவர்கள் முதுநிலை மாணவர் சேர்க்கை (2024-25) குறித்த தகவல் கையேட்டை படித்து, உரிய நேரத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது 9489056710 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...