கோவை மாநகராட்சி ஆணையாளர் கவுண்டம்பாளையம் குழந்தைகள் மையத்தில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் கவுண்டம்பாளையம் குழந்தைகள் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மதிய உணவை பரிசோதித்த ஆணையாளர், டி.வி.எஸ் நகரில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் "உங்களைத்தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் கவுண்டம்பாளையம் குழந்தைகள் மையத்தை இன்று (18.09.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவினை உட்கொண்டு பரிசோதித்தார்.

மேற்கு மண்டலம் வார்டு எண்.17க்குட்பட்ட கவுண்டம்பாளையம் குழந்தைகள் மையத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில், மாநகராட்சி ஆணையாளர் குழந்தைகளுக்கான வசதிகள் மற்றும் பராமரிப்பு குறித்தும் கேட்டறிந்தார்.



இதைத் தொடர்ந்து, அதே வார்டில் உள்ள டி.வி.எஸ் நகரில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளையும் ஆணையாளர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.



இந்த ஆய்வில் மேற்கு மண்டல குழுத்தலைவர் தெய்வயானை தமிழ்மறை, துணை ஆட்சியர் (பயிற்சி) மது அபிநயா இ.ஆ.ப., மாமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுபஸ்ரீ, சம்பத், உதவி செயற்பொறியாளர் சவிதா, மண்டல சுகாதார அலுவலர் வீரன், உதவி நகர திட்டமிடுநர் காந்திமதி, உதவி பொறியாளர்கள் ராஜேஸ்வேணுகோபால், ஹரிபிரசாத், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...