பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான இறுதிச்சுற்று போட்டி

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான இரண்டு நாள் இறுதிச்சுற்று போட்டி நடைபெறுகிறது.


Coimbatore: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் (EDII) சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான இறுதிச்சுற்று நிகழ்வு இன்று (செப்டம்பர் 18) தொடங்கியது.



இந்த நிகழ்வில் EDII நிறுவனத்தின் இயக்குனர் ஆர். அம்பலவாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழுவின் உறுப்பினர் முனைவர் லவ்லி நா லிட்டில் பிளவர் துவக்க உரை நிகழ்த்தினார். EDII நிறுவனத்தின் மாநில திட்ட மேலாளர் சி.சண்முகராஜ் கருத்துரை வழங்கினார். பல்கலைக்கழகத்தின் மைய ஒருங்கிணைப்பாளர் அனைவரையும் வரவேற்று பேசினார். EDII நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி சரண்யா நன்றியுரை வழங்கினார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த இறுதிப்போட்டியில் செப்டம்பர் 18 அன்று சென்னை, சேலம் மற்றும் கோயம்புத்தூர் மண்டலங்களைச் சேர்ந்த 29 அணிகளும், செப்டம்பர் 19 அன்று சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் திருச்சி மண்டலங்களைச் சேர்ந்த அணிகளும் பங்கேற்கின்றன. இந்த நிகழ்வை மேற்கூறிய மண்டலங்களின் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த போட்டியானது மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகளை ஊக்குவிப்பதோடு, அவர்களின் கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்கவும், மேம்படுத்தவும் ஒரு தளத்தை வழங்குகிறது. இது மாணவர்களிடையே தொழில்முனைவோர் ஆர்வத்தை வளர்ப்பதோடு, அவர்களின் புதிய யோசனைகளை செயல்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...