கோயம்புத்தூர் Ticket9 நிறுவனத்தில் முதலீடு செய்த விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர்

கோயம்புத்தூரை தளமாகக் கொண்ட Ticket9 நிறுவனத்தில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியினர் முதலீடு செய்துள்ளனர். இந்த முதலீடு மூலம் நிகழ்வு மேலாண்மை தொழில்நுட்பத் துறையில் புதிய முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Ticket9 என்ற நிறுவனத்தில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியினர் வெளியிடப்படாத தொகையை முதலீடு செய்துள்ளனர். இந்த செய்தி தமிழ்நாடு ஸ்டார்ட்அப் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் சமீப காலமாக பல தமிழ்நாட்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இவர்களின் முக்கியமான முதலீடுகளில் டிவைன் புட்ஸ் முதலீடும் அடங்கும். மேலும், சமீபத்தில் தைரோகேர் வேலுமணி அவர்களைச் சந்தித்து ஸ்டார்ட்அப் துறை குறித்த அறிவுரைகளைப் பெற்று, முழுநேர முதலீட்டாளர்களாக மாறியுள்ளனர்.

யாழினி சண்முகம் மற்றும் சந்தோஷ் பிரேம்ராஜ் ஆகியோர் இணைந்து நிறுவிய Ticket9, ஈவென்ட் டெக் ஸ்டார்ட்அப் பிரிவில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் அனைத்து வகையான நிகழ்வுகளை உருவாக்க, நிர்வகிக்க, விளம்பரப்படுத்த மற்றும் பணமாக்க உதவும் வலுவான SaaS தளத்தை வழங்குகிறது. தற்போது லைவ் நிகழ்ச்சிகளுக்கு சேவை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.

Ticket9 நிறுவனம், ஒரு நிகழ்வு மேலாண்மை செயல்முறையில் அதிக வருவாய் ஈட்டும் வாய்ப்புகளை உருவாக்குவதை மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் மக்களுக்கு அருகில் உள்ள நிகழ்வுகளை அறிந்து கொள்ளவும், அவற்றில் பங்கேற்கவும் உதவுகிறது.

இந்த முதலீடு Ticket9 நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று கருதப்படுகிறது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் வெறும் முதலீட்டாளர்களாக மட்டுமல்லாமல், மூலோபாய முதலீட்டாளர்களாகவும் (strategic investors) இணைகின்றனர். இதன் மூலம் திரைத்துறையில் அவர்களுக்குள்ள நிபுணத்துவம் மற்றும் செல்வாக்கை இந்நிறுவனத்திற்குக் கொண்டு வர முடியும்.

இந்தக் கூட்டணி Ticket9 நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, தமிழ்நாடு, இந்தியா மற்றும் வெளிநாட்டு நிகழ்வுகளுக்குத் தொழில்நுட்பம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் சேவை அளிக்கும் வாய்ப்பையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முதலீடு குறித்து Ticket9 நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "தென்னிந்தியாவின் முன்னணி நடிகை நயன்தாரா மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரிடமிருந்து Ticket9 முதலீடு பெற்றிருப்பதை அறிவிக்க மகிழ்ச்சியடைகிறோம். இந்த முதலீடு நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது" என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...