அமராவதி சர்க்கரை ஆலை புனரமைப்புக்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் சண்முகவேலு

திருப்பூரில் நடைபெற்ற அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு பேசினார். அமராவதி சர்க்கரை ஆலை புனரமைப்பு, சாலை விரிவாக்கம், குடிநீர் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அண்ணா திடலில் திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணை பொதுச் செயலாளருமான சண்முகவேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

சண்முகவேலு தனது உரையில், "அறிஞர் அண்ணாதான் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தவர். மேலும் இவரைப் பின்பற்றி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திட்டத்தை விரிவுபடுத்தினார். தமிழகத்தில் திராவிட கட்சிகளின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் அறிஞர் அண்ணா," என்று குறிப்பிட்டார்.

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை குறித்து பேசிய அவர், "தற்பொழுது ஆலையில் உள்ள இயந்திரங்கள் பழுதடைந்து, கடந்த சில மாதங்களாக அரவை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கரும்பு விவசாயிகள் வேறு பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் தமிழக முதல்வர் மனது வைத்தால் மட்டுமே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை புனரமைப்புக்கு நிதி கிடைக்கும்," என்றார்.



மேலும் அவர், "பொள்ளாச்சி-திண்டுக்கல் வரையிலான நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் மடத்துக்குளம் முதல் பொள்ளாச்சி வரை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் தினமும் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

குடிநீர் பிரச்சினை குறித்தும் சண்முகவேலு பேசினார், "மடத்துக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் முறையாக பராமரிக்கப்படாததால், தற்பொழுது பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் குடிநீர் திட்ட பணிகளை குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் செய்து முடிக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.



இந்நிகழ்வில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமைக் கழக பேச்சாளர்கள் மேட்டுபாளையம் கார்த்திகேயன், கொமரலிங்கம் மணிகண்டன், வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ராஜேந்திரன், குமரலிங்கம் பேரூர் கழக செயலாளர் சிவலிங்கம், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் குமரலிங்கம் வெங்கிடு, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், மடத்துக்குளம் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...