கோவை 1வது வார்டில் 'உங்களை தேடி - உங்கள் ஊரில்' சிறப்பு திட்ட முகாம்

கோவை 1வது வார்டில் "உங்களை தேடி - உங்கள் ஊரில்" சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மனுக்களை அளித்தனர். அதிகாரிகள் விரைவில் தீர்வு காண உறுதியளித்தனர்.



கோவை: கோவையில் முதலமைச்சரின் "உங்களை தேடி - உங்கள் ஊரில்" சிறப்பு திட்ட முகாம் 1வது வார்டில் நேற்று (செப்டம்பர் 18) நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட சமூக நல அலுவலர் சு.அம்பிகா மற்றும் 1வது வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகள் குறித்து மனுக்களை அளித்தனர். மகளிர் உரிமைத்தொகை, பட்டா, சாலை போக்குவரத்து, குடிநீர் மற்றும் பொது பிரச்சினைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன.



மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், அவற்றை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக தீர்க்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.



இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த முகாம் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண்பதற்கான ஒரு முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...