தொப்பம்பட்டி அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து அரசு துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் "உங்களை தேடி உங்கள் ஊரில்" என்ற தமிழக முதல்வரின் சிறப்பான திட்டத்தின் கீழ் இன்று (செப்டம்பர் 19) காலை உணவு திட்டம் குறித்து அரசு துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டனர்.



இந்த ஆய்வின் போது, காலை உணவு திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்தும், உணவின் தரம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. அதிகாரிகள் பள்ளியில் வழங்கப்படும் உணவின் தரத்தை நேரடியாக பரிசோதித்தனர்.



இந்த நிகழ்வின் போது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...