ஆனைமலையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

பொள்ளாச்சி அருகே ஆனைமலை சுள்ளிமேடு பகுதியில் 25 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஆனைமலை பகுதியில் உதவி ஆய்வாளர் முருகநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சுள்ளி மேடு பதி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.



சோதனையின் போது, சுமார் 25 கிலோ மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஆனைமலை பகுதியைச் சேர்ந்த ஜான் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜானிடம் போலீசார் மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள மற்றவர்களையும் கண்டறிய போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...