கோவை N.G.G.O காலனியில் ரயில்வே மேம்பாலம்: மாற்றுப்பாதை குறித்து அதிகாரிகள் ஆய்வு

கோவை N.G.G.O காலனியில் 1 கிலோமீட்டர் நீள ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் மாற்றுப்பாதை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.



Coimbatore: கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் ஊராட்சி, N.G.G.O காலனி ரயில்வே கேட் பகுதியில் 1 கிலோமீட்டர் நீள ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்தப் பணி தொடங்குவதை முன்னிட்டு, அப்பகுதியில் ரயில்வே துறை, போக்குவரத்துத்துறை, மாநில நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மாற்றுப்பாதை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.



N.G.G.O காலனியில் மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து இடிகரை வழியாக கோவில்பாளையம் சென்று சக்தி சாலையை அடையும் பாதையில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. மேலும், இப்பகுதியில் உள்ள ரயில்வே கேட் மூடப்படும் போது மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.



இந்த நிலையில், ரூ.32 கோடி மதிப்பீட்டில் 1 கிலோமீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட ரயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன. அக்டோபர் 1 முதல் பாலப் பணிகள் தொடங்கவுள்ளதால், அன்று முதல் ரயில்வே கேட் மூடப்படும்.



இதனை முன்னிட்டு, அதிகாரிகள் மாற்றுப்பாதை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அசோகபுரம் ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்களுடன் கலந்தாய்வுக் கூட்டமும் நடைபெற்றது. இந்த ஆய்வில் மாவட்ட கவுன்சிலர் S.கார்த்திக், ஊராட்சி துணைத்தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர்கள் மாணிக்கம், கலாசாந்தாராம், வார்டு உறுப்பினர்கள் சுதாகர், ஶ்ரீராம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் தரப்பில், மாற்றுப்பாதை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அதிகாரிகள், தற்போது வெள்ளக்கிணர் ஹவுசிங் யூனிட் வழியாக செல்லும் மாற்றுப்பாதை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், மாற்றுப்பாதை குறித்த அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் விரைவில் வெளியிடும் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...