பொள்ளாச்சி தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: திருமங்கலம் பெண் தபால் ஊழியர் உயிரிழப்பு வழக்கில் உயர் அதிகாரியை கைது செய்யக் கோரிக்கை

பொள்ளாச்சி தபால் நிலைய ஊழியர்கள், திருமங்கலம் பெண் தபால் ஊழியர் உயிரிழப்பு வழக்கில் உயர் அதிகாரியை பணி நீக்கம் செய்து கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Coimbatore: பொள்ளாச்சியில் உள்ள தலைமை தபால் நிலைய ஊழியர்கள், திருமங்கலம் பகுதி பெண் தபால் ஊழியர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படும் உயர் அதிகாரியை பணி நீக்கம் செய்து கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்த சுமதி என்பவருக்கு, அதே அலுவலகத்தில் பணியாற்றிய அஞ்சல் ஆய்வாளர் தீபராஜன் அதிக பணிச்சுமை கொடுத்ததாகவும், அவரது குடும்பத்தைப் பற்றி இழிவாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுமதி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த சம்பவம் தொடர்பாக அஞ்சலக ஆய்வாளர் தீபராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், இந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று கருதும் தபால் ஊழியர்கள், அவரை பணியிடை நீக்கம் செய்யவும், கைது செய்து தக்க தண்டனை வழங்கவும் வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இறந்த பெண் அஞ்சலக ஊழியருக்கு நீதி கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தபால் ஊழியர்களுக்கும் அதிக இலக்கு நிர்ணயித்து அழுத்தம் கொடுப்பதாக ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...