கோவையில் 'Effective Metal Cutting' மாநாட்டின் 6-ஆம் பதிப்பு: 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாட்டில் 'Effective Metal Cutting' மாநாட்டின் 6-ஆம் பதிப்பு நடைபெற்றது. 'Cut Metal: Cut Cost' கருப்பொருளுடன் நடைபெற்ற இம்மாநாட்டில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



Coimbatore: இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் "Effective Metal Cutting" மாநாட்டின் 6-ஆம் பதிப்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (19/09/2024) நடைபெற்றது. 'Cut Metal: Cut Cost' என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த மாநாட்டில் பல்வேறு முன்னணி உலோகம் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வல்லுனர்கள் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு உலோகம் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

குறைந்த செலவில் தரம் மற்றும் செயல் திறனை மேம்படுத்துவது குறித்தும் Metal Cutting தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்தும் கலந்துரையாடும் வகையில் பல்வேறு தொழில்துறை தலைவர்கள் மற்றும் வல்லுநர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும் நிகழ்வாக இந்த மாநாடு அமைந்தது.



கோவை மண்டல CII சேர்மன் ராதாகிருஷ்ணன் தனது உரையில், கோயம்புத்தூரில் உள்ள நிறுவனங்களின் போட்டித்திறன் குறித்தும் கார்பன் சமநிலையை அடைவதற்காக இந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.

இம்மாநாட்டில், Metal Cutting, Machining Future Trends, Precision In Modern Metal Cutting, Fabrication-friendly Metal Cutting and Cost Management In Machining உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் விளக்கப்படங்களுடன் கூடிய விளக்க உரைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.



Lakshmi Machine Works, Bharat Fritz Werner Ltd, Mazak, Makino உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த வல்லுனர்கள் தங்களது அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...