கோவை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.1.50 லட்சம் பறிமுதல்

கோவை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்தியது. அலுவலக ஊழியரிடம் கணக்கில் வராத ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: கோவை வெள்ளலூரில் அமைந்துள்ள சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தி ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்தனர்.

சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நான்சி நித்யா கரோலின் என்பவர் சார்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் மற்றும் தொழில் அமைப்பினரிடம் பத்திர எழுத்தர்கள் மூலம் லஞ்சம் வசூலிக்கப்படுவதாக கோவை லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார் கிடைத்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் பரிமளா தலைமையிலான குழுவினர் செப்டம்பர் 19 அன்று மாலை சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அலுவலக வாயில் கதவுகளை பூட்டிய அதிகாரிகள், உள்ளே இருந்த ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ஊழியர் கீர்த்தி என்பவரிடம் கணக்கில் வராத ரூ.1,50,000 பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அலுவலகம் முடியும் நேரத்தில் திடீரென நடத்தப்பட்ட இந்த சோதனை காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...