சிங்காநல்லூர் மேம்பாலத்திற்கு அனுமதி: விரைவில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்

கோவை சிங்காநல்லூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய மேம்பாலம் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. டெண்டர் விடப்பட்டவுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சிங்காநல்லூர் பகுதியில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தால் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சாலை வசதிகளை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சிங்காநல்லூரில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது டெண்டர் விடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. டெண்டர் விடப்பட்டவுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. இந்த மேம்பாலம் திருச்சி சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே பல மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. காந்திபுரத்தில் இரண்டு அடுக்கு மேம்பாலம், ராமநாதபுரம் பகுதியில் மேம்பாலம், மற்றும் சமீபத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்த உக்கடம் மேம்பாலம் ஆகியவை இதில் அடங்கும். மேலும், அவிநாசி சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கோவை மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், சிங்காநல்லூரில் புதிய மேம்பாலம் கட்டப்படுவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மேம்பாலம் கட்டப்படுவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...