மேட்டுப்பாளையம் பாரதி நகரில் ரூ.17 லட்சம் மதிப்பிலான புதிய ரேஷன் கடை திறப்பு

மேட்டுப்பாளையம் நகராட்சியின் பாரதி நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்பிலான புதிய ரேஷன் கடையை சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் திறந்து வைத்தார்.


Coimbatore: மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 31வது வார்டு பாரதி நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் கலந்துகொண்டு ரேஷன் கடையைத் திறந்து வைத்தார்.



மேலும், பொதுமக்களுக்கு முதல் விற்பனையையும் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் அமுதா, 31வது நகர்மன்ற உறுப்பினர் விஜயலட்சுமி மற்றும் அந்தப் பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் புதிய ரேஷன் கடை திறப்பு விழா, பாரதி நகர் பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் எளிதாக அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...