கோவை நஞ்சப்பா சாலையில் இளம்பெண் ஓட்டிய மின்சார ஸ்கூட்டர் மோதி முதியவர் உயிரிழப்பு

கோவை நஞ்சப்பா சாலையில் நடந்து சென்ற 71 வயது முதியவர் மீது மின்சார ஸ்கூட்டர் மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். 19 வயது இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை நஞ்சப்பா சாலையில் நேற்று (செப்டம்பர் 19) நடந்து சென்ற முதியவர் மீது மின்சார ஸ்கூட்டர் மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் ரோடு சேரன் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி (71) என்பவர் நஞ்சப்பா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென சுப்பிரமணி மீது மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணி தலையில் பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக சுப்பிரமணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மின்சார ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர் கோவை ராம்நகர் சாஸ்திரி ரோட்டைச் சேர்ந்த அஷ்விதா (19) என்ற இளம்பெண் என்பது தெரியவந்தது. இதையடுத்து அஷ்விதா மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் கோவை நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டிகள் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும் என்றும், பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...