கோவை சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளியில் நிலைத்தன்மை பயிற்சியாளர்கள் குழுவின் தொடக்க விழா

கோவை சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளியில் நிலைத்தன்மை பயிற்சியாளர்கள் குழுவின் தொடக்க விழா நடைபெற்றது. ஐந்து மாநகராட்சி பள்ளிகளில் 460 மாணவர்களுக்கு நிலைத்தன்மை மனப்பான்மை பாடத்திட்டம் அறிமுகம்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளியில், கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் ழ நிலைத்தன்மை பயிற்சியாளர்கள் குழு (Zha Sustainability Practitioners Club) இணைந்து நடத்தும் பள்ளிகளில் நிலைத்தன்மை பயிற்சியாளர்கள் குழுவின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்வு மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தலைமையில் செப்டம்பர் 20, 2024 அன்று நடைபெற்றது.

முதற்கட்டமாக, கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள ஐந்து பள்ளிகளில் ழ நிலைத்தன்மை மனப்பான்மை பாடத்திட்டம் (Zha Sustainability Mindset Curriculum - ZSPC) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முயற்சியின் நோக்கம் மாணவர்களிடையே நிலைத்தன்மை மனப்பான்மையை வளர்ப்பது, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அவர்களை தயார்படுத்துவதாகும்.



இந்த திட்டம் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து பள்ளிகளில் அமல்படுத்தப்படுகிறது. அவை:

1. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரங்கநாதபுரம்

2. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் மேற்கு

3. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, ஒக்கிலியர் காலனி

4. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, சித்தாபுதூர்

5. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, பீளமேடு

இந்த பள்ளிகளில் 7 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் சுமார் 460 மாணவ, மாணவியர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாணவர்கள் இந்த திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.



நிகழ்வின் ஆரம்பத்தில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் ழ நிலைத்தன்மை தொடர்பான புத்தகத்தை வெளியிட்டனர். இந்நிகழ்வில் உதவி ஆணையர் செந்தில்குமரன், மாநகராட்சிக் கல்வி அலுவலர் ஆர்.குணசேகரன், ழ அறக்கட்டளை நிறுவனர் கார்க்கி அசோக்குமார், இணை நிறுவனர் ஆர்.எஸ்.விக்னேஷ், செயலாளர் பிரசன்னாதேவி, இணை நிறுவன குழுவின் ஆளுநர் லதா சுந்தரம், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...