கோவையில் K'SIRS பள்ளியில் நடைபெற்ற CAREER FAIR 2024: 40க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் பங்கேற்பு

கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள K'SIRS இண்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 40க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் பங்கேற்று வழிகாட்டுதல் வழங்கினர்.



Coimbatore: கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள K'SIRS இண்டர்நேஷனல் பள்ளியில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு உயர்ப்படிப்பு தொடர்பான K'SIRS CAREER FAIR 2024 வழிகாட்டு நிகழ்ச்சி செப்டம்பர் 20 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர். 40க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் பங்கேற்று மாணவர்களின் உயர் படிப்புக்கான வழிகாட்டுதல்களை வழங்கினர்.

நிகழ்வில் பங்கேற்ற பெற்றோர்கள், இந்த வழிகாட்டு நிகழ்ச்சி தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகக் கூறினர். தடய அறிவியல், உயிர் வேதியியல், ஊடகவியல் உள்ளிட்ட துறைகளின் கீழ் உயர் படிப்பு மேற்கொள்வதற்கான சிறந்த வழிகாட்டுதல்களைப் பெற்றதாகவும், உயர் படிப்புகளுக்கான சிறந்த பல்கலைக்கழகங்களை கண்டறிய இந்நிகழ்ச்சி பெரிதும் உதவியதாகவும் தெரிவித்தனர்.



மாணவர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். பள்ளிப்படிப்பிற்குப் பிறகு என்ன செய்வது என்ற குழப்பம் நிலவியதாகவும், இந்த வழிகாட்டு நிகழ்ச்சியில் பல்வேறு துறைகள் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட படிப்புகள் குறித்த தகவல்களைப் பெற்றது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் கூறினர். பல்வேறு பல்கலைக்கழகங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும், மேற்படிப்பிற்கான வழிகாட்டுதல் மற்றும் வாய்ப்புகள் குறித்து சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.



பொறியியல், கலை, வணிகவியல் என அனைத்து துறைகள் குறித்தும் விரிவான தகவல்கள் வழங்கப்பட்டதாக மாணவர்கள் குறிப்பிட்டனர். மாணவர்களின் உயர் படிப்புக்குத் தேவையான விரிவான தகவல்களை வழங்கி, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த வழிகாட்டு நிகழ்ச்சி அமைந்தது. K'SIRS இண்டர்நேஷனல் பள்ளி நிர்வாகத்திற்கு பங்கேற்றவர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...