கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே போர்வெல் லாரி ஓட்டுநர் ரத்த வெள்ளத்தில் மரணம் - கொலையா என விசாரணை

கோவையில் போர்வெல் லாரி ஓட்டுநர் நந்தகுமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கொலை கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Coimbatore: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள மத்தம்பாளையம் அல்லிநகரில் போர்வெல் லாரி ஓட்டுநர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரமடை அருகே உள்ள சாலவேம்பு பகுதியைச் சேர்ந்த புஜங்கபனின் மகன் நந்தகுமார் (46) என்பவர் போர்வெல் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இரண்டு மனைவிகள் உள்ள நந்தகுமார், தற்போது இரண்டாவது மனைவியுடன் மருதூரில் வசித்து வந்தார்.



நேற்று வேலை இல்லாததால் லாரி நிறுத்தப்படும் அல்லிநகருக்கு வந்த நந்தகுமார், அங்கேயே மது அருந்தியபின் லாரியிலேயே படுத்து தூங்கினார். இன்று காலை அருகில் இருந்தவர்கள் பார்த்தபோது, நந்தகுமார் லாரியில் இருந்து கீழே விழுந்து தலை மற்றும் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்த நந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நந்தகுமார் தானாக கீழே விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...