பொள்ளாச்சியில் வீட்டில் வளர்த்த பூனை கொண்டு வந்த பாம்பால் பெண் உயிரிழப்பு

பொள்ளாச்சி நேரு நகரில், வீட்டில் வளர்த்த பூனை தெருவில் இருந்த பாம்பை உள்ளே கொண்டு வந்ததால், தூங்கிக் கொண்டிருந்த 58 வயது பெண் பாம்பு கடியால் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சி நேரு நகர் பகுதியில் வசித்து வந்த சாந்தி (58) என்ற பெண், தனது மகன் சந்தோஷுடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது கணவர் ரவி உயிரிழந்தார். சாந்தி தனது வீட்டில் ஒரு பூனை குட்டியை ஆசையாக வளர்த்து வந்தார்.

சம்பவம் நடந்த நாளன்று, வீட்டு வளாகத்தில் ஒரு கொடிய விஷப் பாம்பு சுற்றித் திரிந்தது. இதனைக் கண்ட பூனை, அந்தப் பாம்பைப் பிடித்து வீட்டுக்குள் கொண்டு வந்தது. அப்போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சாந்தியை பாம்பு கடித்தது.

சாந்தியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சாந்தி உயிரிழந்தார்.

வீட்டில் செல்லமாக வளர்த்த பூனையே உயிருக்கு வினையானது என்ற இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...