தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான போஸ்டர்: அதிமுக வழக்கறிஞர்கள் காவல் ஆணையரிடம் புகார்

கோவை குனியமுத்தூரில் எஸ்.பி.வேலுமணியை தீவிரவாதி என்று குறிப்பிடும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால், அதிமுக வழக்கறிஞர்கள் கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இச்செயல் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பகுதியில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணியின் புகைப்படத்துடன் "தீவிரவாதி" என்ற வார்த்தை அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த செயல் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்று கூறி, அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் தாமோதரன் கூறுகையில், குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இத்தகைய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகவும், இதனை கண்டித்து பல்வேறு தரப்பினர் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதே போன்ற சம்பவம் கடந்த ஜனவரி மாதம் கோவைப்புதூர் பகுதியில் நடந்ததாகவும், அப்போது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் சிஎஸ்ஆர் புகார் அளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீண்டும் இத்தகைய செயல்கள் நடைபெறுவது கவலையளிப்பதாகவும், கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் சமூக விரோத சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் தங்கள் புகாரில் வலியுறுத்தியுள்ளனர். இந்த புகாரை பெற்றுக்கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக தாமோதரன் தெரிவித்தார்.

மேலும், இது போன்ற செயல்கள் தொடர்ந்தால் அதிமுக வழக்கறிஞர்கள் அனைவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும், பல்வேறு போராட்டங்களை நடத்தவும் தயாராக இருப்பதாக தாமோதரன் எச்சரித்தார். சட்டத்தின் மூலம் இத்தகைய சமூக விரோத செயல்களை தடுக்க அதிமுக வழக்கறிஞர்கள் உறுதி பூண்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...