உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் எத்தலப்ப நாயக்கர் கோவிலில் பாரம்பரிய தேவராட்டம்

உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள எத்தலப்ப நாயக்கர் கோவிலில் வருடாந்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பாரம்பரிய தேவராட்டம், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் அமைந்துள்ள எத்தலப்ப நாயக்கர் திருக்கோவிலில் வருடாந்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய எத்தலப்ப நாயக்கரின் பங்களிப்பை போற்றும் வகையில் இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.



புரட்டாசி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில், எத்தலப்ப நாயக்கர் வம்சாவழியினர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் பங்கேற்கின்றனர்.



இந்த ஆண்டு விழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

முதலில், எத்தலப்ப நாயக்கரின் குலதெய்வமான ஜக்கம்மாளுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்டவை அடங்கும். தொடர்ந்து, எத்தலப்ப நாயக்கர், அவரது துணைவியார், படைத் தளபதிகள் மற்றும் போர் வீரர்களின் சிலைகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.



பின்னர், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட ஜக்கம்மாள், எத்தலப்ப நாயக்கர், அவரது துணைவியார் ஆகியோரின் சிலைகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



விழாவின் முக்கிய நிகழ்வாக, பாரம்பரிய இசைக்கருவியான உருமியின் ஒலியுடன் தேவராட்டம் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் எத்தலப்ப நாயக்கரின் வம்சாவழியினர் மேற்கொண்டிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...