தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் மின்னழுத்தம் மற்றும் நிலைத்தன்மை குறித்த சர்வதேச மாநாடு

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இங்கிலாந்தின் டீசைட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வேளாண் மின்னழுத்தம் மற்றும் நிலைத்தன்மை குறித்த சர்வதேச மாநாட்டை நடத்தியது. 200 பேர் பங்கேற்ற இந்த மாநாடு வேளாண் துறையில் புதிய தொழில்நுட்பங்களை ஆராய்ந்தது.


கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (TNAU) கோயம்புத்தூர், இங்கிலாந்தின் டீசைட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து SPARC & UKIERI திட்டத்தின் கீழ் 19 செப்டம்பர் 2024 அன்று வேளாண் மின்னழுத்தம் மற்றும் விவசாயத்தில் நிலைத்தன்மை குறித்த சர்வதேச மாநாட்டை வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தியது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மாணவ, மாணவியர் என சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

இங்கிலாந்தின் சர்வதேச முதன்மை ஆய்வாளர் (UKIERI) டீசைட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் செந்திலராசு சுந்தரம், இந்த மாநாடு வேளாண் மின்னழுத்தம் மற்றும் நிலையான விவசாய நடைமுறைகள் குறித்த விவாதங்களுக்கான ஒரு முக்கிய மன்றமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக விளக்கினார்.

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் முனைவர் அ.ரவிராஜ், தனது வாழ்த்து உரையில் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நிலையான தீர்வுகள் மற்றும் வேளாண் மின்னழுத்தத்தை குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி தொடக்க விழாவிற்குத் தலைமை தாங்கி மாநாட்டு கட்டுரைகளை வெளியிட்டார்.



அவர் தனது உரையில், SPARC & UKIERI திட்டத்தின் நோக்கம் வேளாண் மின்னழுத்தம் வடிவமைப்பு மற்றும் நிகர பூஜ்ஜிய விவசாயத்திற்கான ஒரு ஆராய்ச்சி கூட்டமைப்பை உருவாக்குவது என்றும், எதிர்காலத்தில் விவசாய நிலைத்தன்மை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளிலும் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் உரையாற்றினர்.



இங்கிலாந்து லண்டன் சவுத் பாங்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஹரி உபாத்யாயா "நீர்-ஆற்றல்-உணவு தொடர்பு மூலம் நிகர-பூஜ்ஜியத்தை அடைவது" குறித்தும், டீசைட் பல்கலைக்கழக பேராசிரியர் குமார் பாச்சிகொல்லா "திறமையான HVAC அமைப்புடன் விளைச்சலை அதிகரிக்க செங்குத்தான விவசாயம்" குறித்தும் உரையாற்றினர்.

வேளாண் மின்னழுத்த தொழில்நுட்பங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வேளாண் பொறியியல் தலையீடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்கள் குறித்த அறிவு பரிமாற்றத்திற்காக தொடர்ச்சியான தொழில்நுட்ப அமர்வுகள், வாய்வழி மற்றும் மின் சுவரொட்டி கட்டுரைகள் இந்த நிகழ்வில் இடம்பெற்றன. இம்மாநாட்டில் 20 வல்லுனர்கள் ஐஐடி, டெல்லி மற்றும் சுவ்லெக்ட் போன்ற தொழிற்சாலைகளுடன் சேர்ந்து சிறப்பு முன்னுரை கட்டுரைகளை எடுத்துரைத்தனர்.

பேராசிரியர் ஆர்.மகேந்திரன் மற்றும் பேராசிரியர் மற்றும் தலைவர் டி.ரமேஷ் ஆகியோர் மாநாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...