கோவை: மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்

கோவை வடக்கு வட்டத்தில் "உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தின் வடக்கு வட்டத்தில் "உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை வழங்கினார்.

பெரியநாயக்கன்பாளையம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் சுதன் சாய், கை மற்றும் கால்களில் குறைபாடுகளுடன் பிறந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்திருந்தனர்.

இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்று (20.09.2024) மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, சுதன் சாய்க்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

இந்த நிகழ்வில் தாட்கோ மேலாளர் கு.மகேஸ்வரி உடனிருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...