மேட்டுப்பாளையம் - கோவை மெமோ ரயிலில் கல்லூரி மாணவியை புகைப்படம் எடுத்த வழக்கறிஞர் கைது

மேட்டுப்பாளையம் - கோவை மெமோ ரயிலில் கல்லூரி மாணவியை செல்போனில் புகைப்படம் எடுத்த வழக்கறிஞர் அப்துல் ரஜாக் கைது செய்யப்பட்டார். பல பெண்கள் இதேபோன்ற புகார்களை அளித்தனர்.


கோவை: மேட்டுப்பாளையம் - கோவை மெமோ ரயிலில் பயணித்த கல்லூரி மாணவியை செல்போனில் புகைப்படம் எடுத்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அப்துல் ரஜாக், தினமும் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு மெமோ ரயிலில் பயணம் செய்து வந்துள்ளார். இவர் ரயிலில் பயணிக்கும் போது கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை தனது செல்போனில் புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலை கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் வந்த ரயிலில் பயணம் செய்த அப்துல் ரஜாக், ஒரு கல்லூரி மாணவியை செல்போனில் படம் எடுத்ததாகவும், அவரை அருவருக்கத்தக்க வகையில் பார்த்ததாகவும், மேலும் அவர் மீது உரசி கொண்டே வந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் ரயில் வந்தவுடன் ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தார். மேலும், அந்த ரயிலில் பயணித்த பல பெண்களும் இதே மாதிரி தங்களிடமும் அவர் நடந்து கொண்டதாக கூறி காவல் நிலையத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கறிஞர் அப்துல் ரஜாக் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...