உடுமலை ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு காளை சிலை மற்றும் செயற்கை நீரூற்றை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்

உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு காளை சிலை, செயற்கை நீரூற்று மற்றும் புதுப்பிக்கப்பட்ட அசோகர் ஸ்தூபி ஆகியவற்றை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு காளை சிலை மற்றும் செயற்கை நீரூற்றை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நேற்று திறந்து வைத்தார்.



உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரவுண்டானா அமைக்கப்பட்டது. ஆனால், பல மாதங்களாக இந்த ரவுண்டானா போதிய பராமரிப்பு இல்லாமல் அலங்கோலமாக காட்சியளித்து வந்தது. இதனால் பொதுமக்கள் ரவுண்டானாவை பராமரித்து அழகுபடுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தன்னார்வலர்களின் உதவியுடன் ரவுண்டானா புதுப்பிக்கப்பட்டுள்ளது.



"பிறப்பிற்கும் எல்லா உயிருக்கும்" என்ற திருக்குறளுக்கு ஏற்ப, தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ஏறு தழுவுதலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழ் எழுத்துக்கள் மற்றும் வீரர்களுடன் கூடிய ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது.





மேலும், வண்ண வண்ண விளக்குகள், செயற்கை நீரூற்றுப் பூங்கா ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் சமூக பங்களிப்பு நிதியில் அமைக்கப்பட்ட தலைவர்கள் பூங்கா மற்றும் புதுப்பிக்கப்பட்ட அசோகர் ஸ்தூபி சந்திப்பு ஆகியவற்றையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

உடுமலையின் அடையாளமாக அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளை சிலை மற்றும் செயற்கை நீரூற்று முன்பு பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.



இந்த நிகழ்வில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், நகர மன்ற தலைவர் மத்தின், நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...