உடுமலையில் பாஜக தலைவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் புகார்

உடுமலையில் பாஜக தலைவர்கள் ராகுல் காந்தியை அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் விதத்தில் பேசியதாக குற்றம் சாட்டினர்.



திருப்பூர்: உடுமலையில் பாஜக தலைவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றிருந்தபோது, இந்திய தேர்தல் நடைமுறை குறித்து பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ராகுல் காந்தியை தவறாக சித்தரித்து பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாஜகவைச் சேர்ந்த தர்விந்தர் சிங் மர்வா, சிவசேனா (ஷிண்டே பிரிவு) கட்சித் தலைவர் சஞ்சய் கெய்க்வாட், உத்தரபிரதேச மாநில அமைச்சர் ரகுராஜ் சிங், மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த எச்.ராஜா ஆகியோர் ராகுல் காந்தியை தவறாக சித்தரித்து பேசியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயல்பாடு பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கலவரத்தை தூண்டிவிடும் நோக்கத்திலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் விதத்திலும் அமைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உடுமலை நகர காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிகழ்வின் போது காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார், கிட்டுசாமி, உடுமலை நகர மன்ற 4-வது வார்டு உறுப்பினர் கலைவாணி, எஸ்.முருகன், வக்கீல் வெற்றிவேல் குமார், பொன் பலராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...