தாராபுரம் அருகே அண்ணாவின் 116வது பிறந்தநாளையொட்டி அதிமுக பொதுக்கூட்டம்

தாராபுரம் அருகே நல்லம்பாளையத்தில் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என உறுதியளிக்கப்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள நல்லம்பாளையத்தில் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். அதிமுக தலைமை கழக பேச்சாளர் இராசகோபால் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்திற்கு தலைமை வகித்த திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் எம்எல்ஏவுமான மகேந்திரன் உரையாற்றினார்.



தனது உரையில் மகேந்திரன், "2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார்" என்று உறுதியாகக் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சின்னப்பன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், பாலகுமாரன், செந்தில்குமார், சோமசுந்தரம், ராஜரத்தினம், நகர செயலாளர் ராஜேந்திரன், பேரூர் கழக செயலாளர்கள் பைப்ரவி, தமிழரசன், லட்சுமணசாமி, வெற்றிவேல், சுகன்குமார், கொளத்துப்பாளையம் அவைத்தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் சின்னத்துரை, சிவசங்கரன், ராமதுரை மற்றும் பல சார்பு நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் இளைஞர் அணி தேர்பட்டி ஆதித்தன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...