கோவை துடியலூரில் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி அரங்கேற்றம்

கோவை துடியலூர் அருகே வி.கே.வி.நகர் வள்ளி முருகன் கலைக்குழுவின் 78வது வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. 250க்கும் மேற்பட்டோர் ஒரே மாதிரியான உடையில் கும்மி ஆடினர்.



Coimbatore: கோவை துடியலூர் அருகே ரங்கம்மாள் காலனி பகுதியில் வி.கே.வி.நகர் வள்ளி முருகன் கலைக்குழுவினரின் வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி 78வது அரங்கேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது.

முருகன் வழிபாட்டுடன் தொடங்கிய இந்நிகழ்வில், வள்ளி முருகன் கலைக்குழு ஆசிரியர் பழனிசாமி மற்றும் ரங்கநாதன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இணை ஆசிரியர்களான தயா நிதி, பிரித்தி தயா நிதி, சுபிக்ஷா, மெய்யரசன் ஆகியோரின் மேற்பார்வையில் நிகழ்ச்சி சிறப்பாக அரங்கேறியது.



5 வயது முதல் 50 வயது வரையிலான 250க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரியான உடையணிந்து கும்மி ஆடி பார்வையாளர்களை கவர்ந்தனர். இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியை காண சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.

வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி ஆகிய இரண்டு வகையான கும்மி நடனங்களும் இந்த நிகழ்வில் அரங்கேற்றப்பட்டன. பாரம்பரிய கலை வடிவங்களை பாதுகாக்கும் முயற்சியாக இந்த ஆண்டு தொடர்ந்து 78வது முறையாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...