ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

பொள்ளாச்சி அருகே நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியின் சாதனைகளையும் அவர் எடுத்துரைத்தார்.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூரில் ஆனைமலை கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் 116வது பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் மகாலிங்கம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி கொரடாவுமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். அதிமுக ஆட்சியின் போது காவிரி நீர், முல்லைப் பெரியாறு அணை, மீனவர் பிரச்சினை ஆகிய தமிழக உரிமைகளை மீட்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.



கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று வேலுமணி குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியின் போது ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை செயல்படுத்த கேரளா அரசுடன் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்தி கமிட்டி அமைத்ததாகவும், ஆனால் இந்த திமுக அரசு ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த கூட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, ஆனைமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தி கார்த்திக், ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் அப்புசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...