கோவை பீளமேடு மற்றும் குருநெல்லிப்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

கோவை பீளமேடு மற்றும் குருநெல்லிப்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, செப்டம்பர் 23 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின்தடை இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் பீளமேடு மற்றும் குருநெல்லிப்பாளையம் பகுதிகளில் நாளை (செப்டம்பர் 23) மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. பாதிக்கப்படும் பகுதிகளில் பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், பி.எஸ்.ஜி.எஸ்டேட், பி.எஸ்.ஜி. மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே-அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதூர், எல்லைத்தோட்டம், வ.உ.சி. காலனி, பி.கே.டி.நகர், அகிலாண்டேஸ்வரி நகர் ஆகியவை அடங்கும்.

மேலும், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்ரமணியா நகர், பாலகுரு கார்டன், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜிவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு ஒரு பகுதி, நஞ்சுண்டாபுரம் ரோடு மற்றும் திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.

அதேபோல, கிணத்துக்கடவு, குருநெல்லிப்பாளையம் துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின்தடை ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது அன்றாட வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்துகொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...