தோலம்பாளையத்தில் குடிநீர் பிரச்சினைக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல்

கோவை மாவட்டம் தோலம்பாளையத்தில் 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை மற்றும் ஊராட்சி தலைவரின் உறுதிமொழிக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தோலம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தோலம்பாளையம் ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் பெரும்பாலானவை மலைவாழ் கிராமங்களாகும். தோலம்பாளையம் என்ற ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியாகும்.



இப்பகுதிக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் வினியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தோலம்பாளையம் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைகளை மறித்து வாகனங்களை செல்ல விடாமல் தடுத்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, காரமடை காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...