கோவையில் TNUES ஊழியர்கள் வேலை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவையில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் (TNUES) கீழ் பணியாற்றிய ஊழியர்கள், தங்களது வேலை நிறுத்தப்பட்டதால் மீண்டும் வேலை வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


Coimbatore: தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் (TNUES) கீழ் பணியாற்றிய ஊழியர்கள் வேலை வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இந்த ஊழியர்கள் தமிழ்நாடு அரசின் TNUES திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளாக கோவை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் பணியாற்றி வந்ததாகக் கூறினர். ஆனால் தற்போது அவர்களின் வேலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளதாகத் தெரிவித்தனர்.



TNUES ஊழியர்கள் மேலும் தெரிவித்ததாவது, "தற்போது சுய உதவிக்குழு மூலம் வேலை வழங்கப்படும் என்றும், குழுவில் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை என்றும் கூறப்படுகிறது. இதனால் குழுவில் இல்லாதவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்."



எனவே, TNUES திட்டத்தின் கீழ் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மனுவின் மீது மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...