மேயர் வடவள்ளி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்

கோயம்புத்தூர் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வடவள்ளி மற்றும் மருதாபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் கூடுதல் வகுப்பறைகளை ஆய்வு செய்தார். மேலும், கல்வீரம்பாளையம் கொங்கு நகரில் 24 மணி நேர குடிநீர் விநியோகப் பணிகளையும் பார்வையிட்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சனிக்கிழமை (செப்டம்பர் 23) வடவள்ளி மற்றும் மருதாபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். மேற்கு மண்டலம், வார்டு எண் 37க்குட்பட்ட இப்பள்ளியில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவர் கல்வீரம்பாளையம், கொங்கு நகரில் 24 மணி நேர குடிநீர் விநியோகப் பணிகளையும் ஆய்வு செய்தார்.



கொங்கு நகரில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு தரைதளம் அமைப்பதற்கான உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வுப் பணியில் மேற்கு மண்டலத் தலைவர் தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் குமுதம், உதவி ஆணையர் சந்தியா, உதவி செயற்பொறியாளர் சவிதா, உதவி நகர திட்டமிடுநர் காந்திமதி, உதவி பொறியாளர் விமலா, மண்டல சுகாதார அலுவலர் வீரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...