பொள்ளாச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த முள்ளம்பன்றி: 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பிடிபட்டது

பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முள்ளம்பன்றி புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு முள்ளம்பன்றியை பிடித்து ஆழியார் வனப்பகுதியில் விடுவித்தனர்.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முள்ளம்பன்றி ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் இன்று காலை நடந்தது.

அங்கலக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ தேவைக்காக வந்து செல்கின்றனர். இன்று காலை வழக்கம் போல ஊராட்சி தூய்மை பணியாளர்கள் சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள செடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென முள்ளம்பன்றி ஒன்று அப்பகுதியில் தென்பட்டது.



இதைக் கண்ட பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முள்ளம்பன்றியை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால், முள்ளம்பன்றி அங்கிருந்து தப்பி ஓடி ஊர் பகுதிக்குள் புகுந்தது.

தொடர்ந்து மூன்று மணி நேரம் நடந்த போராட்டத்திற்குப் பிறகு, வனத்துறையினர் முள்ளம்பன்றியை பிடித்தனர். பின்னர் அதனை ஆழியார் அடர்ந்த வனப் பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...