தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் ரிலையன்ஸ் உயிர் சக்தி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் ரிலையன்ஸ் உயிர் சக்தி நிறுவனம் இடையே உயிர் சக்தி உற்பத்திக்கான தீவனப் பயிர்களை அடையாளம் காண்பதற்காக 20.09.2024 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் ரிலையன்ஸ் உயிர் சக்தி நிறுவனம் இடையே 20.09.2024 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் உயிர் சக்தி உற்பத்திக்கான தீவனப் பயிர்களை அடையாளம் காண்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் இரா.தமிழ்வேந்தன் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போதைய சூழலில் உயிர் சக்தி ஆற்றலுக்கான தேவை அதிகரித்துள்ளதால், அதிக தாவர உற்பத்தி திறன் மற்றும் புதுபிக்கத்தக்க வளங்கள் கொண்ட தீவனப் பயிர்கள் இந்த தேவையை பூர்த்தி செய்வதற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையத்தின் கீழ் இயங்கும் தீவனப் பயிர் துறையின் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட தீவனப் பயிர் இரகங்கள் அதிக தாவர உற்பத்தி திறன் கொண்டவை. குறிப்பாக, அதிக கரிமப்பொருள் மற்றும் அதிக தாவர உற்பத்தி திறன் கொண்ட கம்பு நேப்பியர் புல், உயிர் சக்தி உற்பத்திக்கு சிறந்த மூலப்பொருளாக கருதப்படுகிறது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பாக பதிவாளர் முனைவர் இரா.தமிழ்வேந்தனும், ரிலையன்ஸ் உயிர் சக்தி நிறுவனத்தின் சார்பாக முதன்மை செயல் அலுவலர் பசீர் அகமது சிராசியும் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்வில் பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குனர் முனைவர் ஆர்.இரவிகேசவன், தீவனப் பயிர் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஆர். புஷ்பம், தீவனப் பயிர் துறையின் விஞ்ஞானிகள், ஆர்.பி.இ.எல் ஹைதராபாத் முதன்மை மேலாளர், ஆர்.பி.இ.எல் மும்பை திரு ஜி.ஆனந்தன், பாலாஜி பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, உயிர் சக்தி ஆற்றல் உற்பத்திக்கு ஏற்ற தீவனப் பயிர்களை எவ்வாறு பயிர் செய்ய வேண்டும் என்ற தொழில்நுட்பத்தை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ரிலையன்ஸ் உயிர் சக்தி நிறுவனத்திற்கு வழங்கும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...