உக்கடம் புல்லுக்காட்டில் புதிய விளையாட்டு மைதானம் திறப்பு: மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

கோவை உக்கடம் புல்லுக்காட்டில் ரூ.6.90 லட்சம் மதிப்பீட்டில் 1.09 ஏக்கர் பரப்பளவில் புதிய விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று (23.09.2024) இதனை திறந்து வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி உக்கடம், புல்லுக்காடு, சூரிய மின்னாற்றல் உற்பத்தி மையம் (Solar Power Plant) அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.09.2024) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இ.கா.ப., மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., மற்றும் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.86க்குட்பட்ட உக்கடம், புல்லுக்காடு பகுதியில் ரூ.6.90 இலட்சம் மதிப்பீட்டில் 1.09 ஏக்கர் பரப்பளவில் இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1.00 ஏக்கர் பரப்பளவிற்கு மண்மேடுகள் சமன் செய்யப்பட்டு, குப்பைகள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டுள்ளது.



270.00 மீட்டர் நீளத்திற்கு முள்கம்பிவேலி உடன் கூடிய இரும்பு கதவுடன் கூடிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.



திறப்பு விழாவிற்கு முன்னதாக, விளையாட்டு மைதான வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், மேயர், மாநகர காவல் ஆணையாளர், மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.



மேலும், சுமார் 86-வருட பாரம்பரியமிக்க மரம் மறுநடவு செய்யப்பட்டதையும் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் மண்டல உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், மாமன்ற உறுப்பினர் அகமதுகபீர், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி நகர திட்டமிடுநர் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர் சுந்தர்ராஜன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு எண்.45க்குட்பட்ட மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலையம் எதிர்ப்புறம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

உடன் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், மேற்கு மண்டல குழுத்தலைவர் தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையர் து.சு.துரைமுருகன், உதவி செயற்பொறியாளர் சவிதா, மண்டல சுகாதார அலுவலர் வீரன், இளம்பொறியாளர் ஹரிபிரசாத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...