கோவையில் மாணவியர் விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் ஆய்வு

கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மாணவியர் விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 10 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய கட்டிடத்தின் பணிகளையும் பார்வையிட்டார்.



கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மாணவியர் விடுதியில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த விடுதி ஆதி திராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கி வருகின்றனர்.

10 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வளாகத்திலேயே புதியதாக அனைத்து வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதி கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அதன் பணிகள் நடைபெற்று வருகின்றன.



அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கட்டிடம் கட்டப்பட்டு வரும் இடம் மற்றும் அதன் வரைபடம், பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவர் விடுதிக்குள் சென்ற அமைச்சர், அங்குள்ள வேலையாட்கள் மற்றும் தங்கி கல்வி பயின்று வரும் மாணவிகளிடம் விடுதியில் அளிக்கப்படும் வசதிகள் மற்றும் உணவு போன்றவை குறித்து கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ், "கோவையில் 10 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்தப் பணிகளை தற்பொழுது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம். இப்போது கட்டப்பட்டு வரும் கட்டிடம் அனைத்து வசதிகளுடன் கூடியது. குறிப்பாக கட்டிடத்திற்குள்ளேயே மாணவிகள் தங்கும் அறைகள், குளியலறைகள், மேசைகள், நாற்காலிகள், கட்டில்கள் போன்றவை அனைத்தும் இடம்பெறும் வகையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் தமிழகத்தின் திருச்சி, மதுரை, சென்னை, சேலம் உள்ளிட்ட நகரங்களிலும் மாணவர் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...