கோவையில் கிடந்த ரூ.50,000-ஐ காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு காவல் ஆணையர் பாராட்டு

கோவை மாநகரில் சாலையில் கிடந்த ரூ.50,000-ஐ C-2 பந்தய சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிர்மலா என்ற பெண்ணை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் IPS பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.


கோவை: கோவை மாநகரில் சாலையில் கிடந்த ரூ.50,000-ஐ காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் IPS பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவை மாநகரில் உள்ள ஒரு சாலையில் ஒருவர் ரூ.50,000 பணத்தை அண்மையில் தவறவிட்டுள்ளார். இந்த பணம் அடங்கிய பண்டில் கேட்பாரின்றி கிடந்துள்ளது. இந்நிலையில் அந்த வழியே வந்த நிர்மலா எனும் பெண் இந்த பண்டிலைப் பார்த்துள்ளார். அதில் ரூ.50,000 இருப்பதைக் கண்டதும், அருகில் உள்ள C-2 பந்தய சாலை காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைத்துள்ளார்.

நேர்மையாக செயல்பட்ட நிர்மலாவை கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் IPS இன்று (செப்டம்பர் 23) நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், அவரது நேர்மையான செயலுக்காக சிறப்பு சான்றிதழ் ஒன்றையும் வழங்கினார்.

இத்தகைய நேர்மையான செயல்கள் சமூகத்தில் நல்ல முன்னுதாரணமாக அமையும் என்றும், மற்றவர்களும் இதுபோன்ற நேர்மையான செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் IPS தெரிவித்தார். பொதுமக்களின் ஒத்துழைப்பு காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...