கோவை தொழிலதிபர் தொழிலாளர்களை விமானப் பயணத்தில் அழைத்துச் சென்று கனவை நனவாக்கினார்

கோவை பேரூரைச் சேர்ந்த பிரியா கேட்டரிங் உரிமையாளர் லட்சுமி ராஜனின் மகன் பிரகாஷ் தேவராஜன், 26 தொழிலாளர்களை விமானப் பயணத்தில் அழைத்துச் சென்று தனது சிறுவயது கனவை நிறைவேற்றினார்.


கோவை: கோவை மாவட்டம் பேரூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி ராஜன் என்பவர் பிரியா கேட்டரிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது மகன் பிரகாஷ் தேவராஜன், தனது நிறுவனத்தில் பணிபுரியும் 26 தொழிலாளர்களை விமானப் பயணத்தில் அழைத்துச் சென்று தனது சிறுவயது கனவை நிறைவேற்றியுள்ளார்.

பிரகாஷ் தேவராஜன், தனது நிறுவனத்தில் பணிபுரியும் 26 தொழிலாளர்களை கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சேலம் வரை விமானப் பயணம் செய்ய வைத்தார்.



அதோடு மட்டுமல்லாமல், அவர்களை கேரளாவின் ஆலப்புழாவுக்கு அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் படகு சவாரி உள்ளிட்ட சுற்றுலா பயணம் மேற்கொள்ளச் செய்தார்.

இது குறித்து பிரியா கேட்டரிங்கில் பணிபுரியும் சரோஜினி என்ற தொழிலாளி கூறுகையில், "பிரகாஷ் சிறுவயதில் இருந்தே எங்களுடன் மிகவும் அன்பாகப் பழகும் குணம் கொண்டவர். சிறு வயதில் ஒருநாள் 'நீ பெரியவனாகி என்ன செய்யப் போகிறாய், உன்னுடைய ஆசை என்ன' என்று சாதாரணமாகக் கேட்டோம். அப்போது, 'நான் பெரியவனாகி உங்களையெல்லாம் விமானத்தில் அழைத்துக் கொண்டு செல்வேன்' என்று கூறினார். அப்போது அதைக் கேட்டு சிரித்துக் கொண்டு சாதாரணமாகத்தான் நாங்கள் இருந்தோம். ஆனால், அன்று அவர் சொன்னதை கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றியுள்ளார். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது," என்றார்.

தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, தனது கனவை நிறைவேற்றிய பிரகாஷ் தேவராஜனுக்கு பலரும் தற்போது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...