கோவை கல்லூரி மாணவர்கள் வால்பாறையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் படுகாயம்

கோவையின் ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் வால்பாறையில் சுற்றுலா சென்றபோது, ஸ்டேன்மோர் எஸ்டேட் அருகே ஆம்புலன்சுடன் மோதி விபத்துக்குள்ளானர். ஒரு மாணவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார்.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா சென்ற கோவை ராமகிருஷ்ணா தனியார் கல்லூரி மாணவர்கள் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.

கோவையில் உள்ள ராமகிருஷ்ணா தனியார் கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்கள் 3 இருசக்கர வாகனங்களில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் சோலையார் அணையை நோக்கி செல்லும் வழியில், ஸ்டேன்மோர் எஸ்டேட் வளைவில் திரும்பும்போது, டாடா காப்பி எஸ்டேட்டுக்கு சொந்தமான ஆம்புலன்சுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.



இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஸ்ரீகாந்த் (20) மற்றும் ரோஷன் (20) ஆகிய இருவரும் சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரையும் நண்பர்கள் ஆட்டோவில் ஏற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே ஸ்ரீகாந்த் உயிரிழந்துவிட்டார். ரோஷன் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்த ஸ்ரீகாந்தின் உடல் வால்பாறை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. வால்பாறை காவல் ஆய்வாளர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இச்சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...