கோவை 29-வது வார்டில் மழைநீர் வடிகால் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார் மேயர்

கோவை மாநகராட்சியின் 29-வது வார்டில் ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் 210 மீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால் கட்டுமான பணியை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இப்பணி மாநகராட்சி பொதுநிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.29க்குட்பட்ட கணபதி, கணபதி புதூர் 3-வது வீதியில் மழைநீர் வடிகால் புதுப்பித்து திரும்ப அமைப்பதற்கான கட்டுமான பணி தொடங்கப்பட்டது. இப்பணியை மாநகராட்சி பொதுநிதியிலிருந்து 210 மீட்டர் தொலைவிற்கு ரூ.10.80 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.

மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று (செப்டம்பர் 24) இப்பணியை தொடங்கி வைத்து, பார்வையிட்டார். இந்நிகழ்வில் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன், உதவி பொறியாளர்கள் எல்.எஸ்.மகேஷ், நாசர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மழைநீர் வடிகால் கட்டுமான பணி முடிவடைந்ததும், அப்பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது நகரின் வடிகால் அமைப்பை மேம்படுத்தி, சுகாதாரமான சூழலை உருவாக்க உதவும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...