பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் தர்ணா: குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி போராட்டம்

பொள்ளாச்சி அருகே குள்ளக்காபாளையம் நரிக்குறவர் காலனியில் 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபுதேவா என்பவர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார்.


Coimbatore: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனியில் வசித்து வரும் பிரபுதேவா என்பவர், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த 3 மாதங்களாக தங்கள் காலனியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறி இருசக்கர வாகனத்தை நிறுத்தி தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.



வருவாய்த் துறையினர் பிரபுதேவாவிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் கூறியதாவது: "எங்கள் காலனிக்கு மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் எங்களிடம் அடிக்கடி பணம் வாங்குவதோடு மட்டுமல்லாமல் காடை, முயல், கௌதாரி என கேட்டாங்க. அதையும் நாங்க கொடுத்தாச்சு. ஆனால் இதுவரை தண்ணீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் குடிக்க கூட ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். எல்லாம் கொடுத்தும் தண்ணீர் வரவில்லை. இனி சாப்பிட காட்டுக்குள் இருக்கும் மான் கேப்பாங்க, கொடுக்க முடியுமா? பாரஸ்ட் காரங்க சும்மா இருப்பாங்களா? எதை கொடுத்தால் எங்க காலனிக்கு தண்ணீர் கொடுப்பாங்க?"

பிரபுதேவாவின் இந்த வார்த்தைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர் வருவாய்த்துறையினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பிரபுதேவாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...